ஆர். முத்துக்குமார்
தேசிய அரசியலில் மூன்றாவது அணி என்பது கேலிக்குரிய சங்கதி. பெரிய கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட அல்லது பிரதமர் கனவில் அரசியலை நகர்த்துகின்ற தலைவர்களால் உருவாக்கப்படும் அணி என்று சொல்லப்படுவதுண்டு.
தற்போது தேசிய அளவில் மூன்றாவது அணி தேர்தல் களத்தில் இருக்கிறது. அதன் முக்கியமான உறுப்பினர்கள் இடதுசாரிகள். தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
திடீரென நான்காவதாக ஒரு அணி உருவாகியிருக்கிறது. உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் செல்வாக்கு கொண்ட முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகிய மூவரே இந்த நான்காவது அணியின் காப்பிரைட் ஹோல்டர்கள். 80 + 42 தொகுதிகளில் இந்த நான்காவது அணி ஏதேனும் மேஜிக் செய்துவிட முடியும் என்று நம்புகிறது இந்த மூவர் அணி.
அப்படி ஜெயித்தால்?
இதற்கான பதிலை லாலு சூசகமாகச் சொல்லிவிட்டார்.
'நான்காவது அணி காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரானது அல்ல'
Friday, April 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
காங்கிரசும் தோற்கப் போகிறது.
பா.ஜ.க. வும் தோற்கப் போகிறது.
இடது சாரிகள் முந்தானைகள் மாயா,ஜெயா என்று மண்டியிடப் போகிறார்களா,
லாலு,பஸ்வான்,பவார் காம்ரேடுகளாகப் போகிறார்களா?
இல்லை காங்கிரசே பரவாயில்லையென்று கூட்டணி போடப் பார்க்கிறார்களா?
கழுதைகள் தேய்ந்து கட்டெறும்புகளாகிறது.
காம்ரேடுகள் தேய்ந்து கழுதைகள் ஆகிறார்கள்.
புதிதாகத் தலைவர்கள் வர விடவும் மாட்டார்கள்.
மக்களாட்சி பண ஆட்சியில் குதிரை வியாபார ஆட்சி யாகத்தான் இருக்கும்.
Post a Comment